ரசம் - கற்கம் - செயநீர் - குளிர்ந்தநீர் - வெந்நீர் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
பாரினின் மாந்த ருண்ணும் பற்பல பண்ட மெல்லாஞ்
சீரண மாகுங் காலந் தெளியவே செப்பக் கேண்மோ
காரண ரசமோ ரேழு கடிகையாங் கற்கஞ் செய்நீர்
வீரணத் தண்ணீர் சாமம் வெந்நீரு மிரண்டே சாமம்
- பதார்த்த குண சிந்தாமணி
ஏதேனும் ஒன்றைப் பிழிந்த சாறு ஏழு நாழிகையிலும், அரைத்த மருந்துகள், செய்நீர்கள், குளிர்ந்தநீர் இவை ஒரு சாமத்திலும் (மூன்று மணி நேரம்), வெந்நீர் இரண்டு சாமத்திலும் (ஆறு மணிநேரம்) சீரணமாகும்.