பகல் நித்திரை - எண்சீர் ஆசிரிய விருத்தம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

தண்டமேட் டரட்சிய மூருத் தம்பஞ்
..சருவாங்க முக்கிராக் கிரகஞ் சுப்தி
துண்டமுறு வனுத்தம்பந் திருக்குத் தம்பஞ்
..சோணிதமாட் டியம்புருவா டோப கந்தண்
அண்டுகிருத் திரசியூர்த் துவஞ்சம் பூக
..மவபேத மவதந்(தி)ர மவதா னந்தாள்
விண்டவிவுர் தாசியமிப் பதிணெண் காற்கும்
..வித்தாகும் பகலனந்தன் மேவின் மாதோ 1489

- பதார்த்த குண சிந்தாமணி

பகல் நித்திரை கொண்டால் தண்டம், மேட்டாரசீயம், ஊதஸ்தம்பம், சருவாங்கம், உக்கிரகிரகம் முதலான பதினெட்டு வகை வாத நோய்களும் உருவாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Feb-22, 11:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே