தமிழர் பண்பாடு

தமிழர் பண்பாடு !
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

காதலும் வீரமும் கண்ணெனக் கொண்டவர் /
ஈதலும் கொடையுமே இயல்பென வாழ்பவர்!

கல்வியில் கேள்வியில் கற்றுத் தெளிந்தவர் /
முல்லைக்கும் தேரினை முன்னே அளித்தவர்!

மொழிகளே உலகினில் தோன்றாப் போதிலே /
பழியிலாப் பைந்தமிழ் பாரினில் செழித்ததே!

மானுடர் யாவரும் காடுறைக் காலத்தே
வானுயர் மாளிகைத் தமிழின வாழ்க்கையே!

விருந்தொடு மருந்தொடு விரிந்திடும் மகிழ்வொடு/
திருந்தியப் பண்பொடு தழைப்பவர் தமிழரே!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (5-Feb-22, 2:27 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 44

மேலே