கண்களின் கதைகள்

கண்கள் சொல்லும் கதைகள்.
*********

விந்தைகள் செய்திடும்
விழிகள் இரண்டும்/
பந்தென உருண்டு
பார்வையில் ஒன்றுமே !

எண்சாண் உடலின்
எழில்மிகு வாசல்/
விண்ணையும் மண்ணையும்
விளக்கிடும் விளக்கே!

இதயம் எழுந்திடும்
இனியநல் அன்பினை /
உதித்திடும் காதலை
உணர்த்திடும் விழிகளே!

வரையறை இல்லா
வாழ்வினில் நேசம் /
கரைமீறும் வெள்ளமாய்க்
கண்களில் பாயுமே !

கண்கள் சொல்லிடும்
கதைகளே வாழும்/
எண்ணில் அடங்கா
இடர்களும் தீருமே!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (6-Feb-22, 7:48 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 198

மேலே