பதில் வேண்டி நிற்கும் உன் காதல்பித்தன்

உனை பார்த்த நொடியில் பலநாள்
பழகிய உணர்வு எழுந்ததேன்..?
உன் பிம்பம் என் இதயத்தில்
நீக்கமர நிறைந்ததேன்..?
உன் விழியில் வீழ்ந்து வழியில்
துணைவர மனம் விழைந்ததேன்..?
உனை சீண்டி உன் முகம் காட்டும்
பாவனைகளை ரசித்ததேன்..?
உன் விழிநீர் துடைக்க என்
கரங்கள் துடித்ததேன்..?
உன் பயப்பார்வை கண்டு உனை
கையணைப்புக்குள் பாதுகாக்க நினைத்ததேன்..?
உன் அழகில் பித்தாகி உனை
முத்தமிட்டு மூர்ச்சையாக்க விரும்பியதேன்..?
ஏன் என்ற என் இத்தனை கேள்விகளுக்கும் நீ கூறும் பதில்
அறிய இதயம் மருகுவதேன்..?
பதில் அளிப்பாயா..?
பதிலாக உன்னையே அளிப்பாயா..?

எழுதியவர் : தாய்த்தமிழ் காதலி💗 (7-Feb-22, 9:50 pm)
பார்வை : 148

மேலே