தாய்த்தமிழ் காதலி 💗 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தாய்த்தமிழ் காதலி 💗 |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 11-Jul-2001 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Jan-2022 |
பார்த்தவர்கள் | : 69 |
புள்ளி | : 13 |
என் பெயர் நந்தினி. கணிதத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றவள். தமிழின் மேலும் தமிழ் படைப்புகளின் மேலும் அதீத காதல் கொண்டவள்.
நம்பிக்கையே விதை..!
புரிதலே ஊற்றப்படும் நீர்..!
அன்பே வளர்ச்சிக்கான ஒளி..!
அக்கறையே வளம்மிக்க மண்..!
இதில் ஏதேனும் ஓன்று சரி இல்லை என்றாலும்,
காதல் எனும் தாவரத்தின் உயிர் பிரிந்துவிடும்..
நம்பிக்கை இல்லா உறவுகள்
ஆழமின்றி ஊன்றப்பட்ட மரக்கன்று,
சிறுக் காற்றடித்தாலும்
சிதைந்துவிடும்.
அன்பு கொண்டவர்களின்
அதிகாரம் கூட அழகானதே..!
நம் மீது கொண்ட அக்கறையை
வெளிப்படுத்தும் போது..
காதல்
நீ எனக்கு
என்ன செய்தாய்? எனும்
கேள்வி அல்ல...
நான் உனக்காக
எதையும் செய்வேன் எனும்
உறுதிமொழி..!
ஆழி போன்ற கருவிழிகளில்
அசர வைக்கும் அழகில்
எதிர்த்து நிற்கும் துணிவில்
இசைந்து கொடுக்கும் பணிவில்
சுட்டெரிக்கும் கோபத்தீயில்
சுழன்றடிக்கும் காதலில்
விரும்பியே வீழ்கிறேன்
உன்னில் வீழ்வது நான் வாழ்வதற்கெ..!
உனை பார்த்த நொடியில் பலநாள்
பழகிய உணர்வு எழுந்ததேன்..?
உன் பிம்பம் என் இதயத்தில்
நீக்கமர நிறைந்ததேன்..?
உன் விழியில் வீழ்ந்து வழியில்
துணைவர மனம் விழைந்ததேன்..?
உனை சீண்டி உன் முகம் காட்டும்
பாவனைகளை ரசித்ததேன்..?
உன் விழிநீர் துடைக்க என்
கரங்கள் துடித்ததேன்..?
உன் பயப்பார்வை கண்டு உனை
கையணைப்புக்குள் பாதுகாக்க நினைத்ததேன்..?
உன் அழகில் பித்தாகி உனை
முத்தமிட்டு மூர்ச்சையாக்க விரும்பியதேன்..?
ஏன் என்ற என் இத்தனை கேள்விகளுக்கும் நீ கூறும் பதில்
அறிய இதயம் மருகுவதேன்..?
பதில் அளிப்பாயா..?
பதிலாக உன்னையே அளிப்பாயா..?
" நான் என் கண்களை வெறுக்கிறேன்,
அவை உன்னை அடிக்கடி
பார்க்கிறது !👁
நான் என் காதுகளை வெறுக்கிறேன், அவை
எப்போதும் உன் குரலை
கேட்க துடிக்கிறது !👂
நான் என் உதடுகளை வெறுக்கிறேன், அவை
எப்போதும் உன் பெயரை
சொல்ல நினைக்கிறது !👄
நான் என் கைகளை வெறுக்கிறேன்,
அவை எப்போதும் உன்னை தொட அலைகிறது!👐
நான் என் கால்களை வெறுக்கிறேன், அவை எப்போதும் உன்னை
நோக்கி நடக்கிறது!👣
நான் என் இதயத்தை வெறுக்கிறேன்,
அது உனக்கு மட்டுமே இடம்
கொடுக்கிறது!💓
பின் நான் வேறு எதைத்தான் விரும்புகிறேன் ?👎
அன்பே! உன்னை! 👈
உன்னை மட்டுமே!"👈
கண்கொட்டும் கதிரவனாய்
நீவந்து நின்றிருக்க
காய்ந்திடாமல் பார்த்து இரசிக்க
பாவை இவள் வந்தேனடா.........
காலை வேளை என்றாலே - உன்
காமவிழி காதல் காண
சாலை ஓரம் நின்று
காத்து கிடந்தேனடா..........
உன் பார்வைபட்ட இடமெல்லாம்
பாதுகாப்பு செய்து வைத்து
பாவி இவள் பாசமாய்
மறைத்து வைத்தேனடா...........
உள்ளூர பதுக்கி வைத்து
ஊர் யாரும் பார்த்திடாமல்
ஊமைவிழி பார்வையிலே
உன்னிடமே சொன்னேனடா........
உங்கள்
😍தமிழ் அழகினி✍️