பாவையின் பார்வை

கண்கொட்டும் கதிரவனாய்
நீவந்து நின்றிருக்க
காய்ந்திடாமல் பார்த்து இரசிக்க
பாவை இவள் வந்தேனடா.........

காலை வேளை என்றாலே  - உன்
காமவிழி காதல் காண
சாலை ஓரம் நின்று
காத்து கிடந்தேனடா..........

உன் பார்வைபட்ட இடமெல்லாம்
பாதுகாப்பு செய்து வைத்து
பாவி இவள் பாசமாய் 
மறைத்து வைத்தேனடா...........

உள்ளூர பதுக்கி வைத்து
ஊர் யாரும் பார்த்திடாமல்
ஊமைவிழி பார்வையிலே
உன்னிடமே சொன்னேனடா........

உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (23-Jan-22, 7:04 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
Tanglish : PAAVAIYIN parvai
பார்வை : 273

மேலே