மெளனா
மெளனா....
ஆழ்கடலின் அழுத்தம்
உன் நெஞ்சம்.
அலைகடலின் ஆர்ப்பரிப்பு
என் இதயம்.
உன் மெளனத்தை
நான் ஆராதிக்கிறேன்...உண்மைதான்.
பல சமயம் அதுவே
என் நெஞ்சைப் பிழியும்போது...
நான் கருமேகம்தான்.
பார்க்க பயமாகவும்...
ஏதோ உள்ளது போல்தான் தோன்றும்
குளிர் தென்றல் பட்டுவிட்டாலோ
மழையென கொட்டிவிடும்.
ஆனால்..... மெளனா
நீயோ புயலாயல்லவா வீசுகிறாய்
மேகம்....கரைந்தே போகின்றது.