காதல்
பழக பழக இசை என்றார்
பழகி பார்த்தேன் இசை வரவில்லை
எழுத எழுத கவிதை என்றார்
எழுதி பார்த்தேன் கவிதை கூடவில்லை
என்மனதில் வரித்தவளைப் பார்க்கும் வரை
அவள் வந்தாள் என்முன்னே நின்றாள் பார்வையும்
தந்தாள் புன்முறுவல் சேர்த்து என்னெண்ணமெல்லாம்
கவிதையானது இசையும் என்னையறியாது அத்துடன்
சேர்ந்தது என்னவள் என்பாடலானாள்
என் இசைக்கு நடனமும் சேர்த்தாள்
இப்படித்தான் வந்தது எங்கள் காதல்