என்னை சீண்டினாள்
கலிவிருத்தம்
மலரொன்று மலராய் மலர்ந்திடும் நிகழ்வு
புலரா காலையின் பனிபொழியும் நிலையில்
உலரா வகையில் மலரில் பனித்துளி
தலைவியின் முகத்தை தந்ததே நினைவில்
கதிரவன் காலையில் வெளிப்படும் நிலையில்
அதிசய காதல் என்னுள் துளிராய்
விதையது புவியை கீரியே வெளிவந்து
புதிய பிறப்பினை கொள்வதாய் இருந்தது
தூரத்தில் இருந்தே என்னைப் பார்த்தாள்
தூரலில் பன்னீரும் பூவின் மணமும்
சாரலாய் தூவிடும் வகையில் அவளும்
காரிருள் விலக்கி அருகில் வந்தாள்
இதயமும் இயந்திர வேகத்தில் துடிக்க
மதயானை மயங்கி நிற்பதாய் நானும்
மதியது முயங்கி நங்கூர கப்பலாய்
விதிர்த்தே அவளை கண்ணால் விழிங்கினேன்
பனியுள் சிக்கிய வெண்ணையாய் நிற்க
தனியாய் வந்தவள் என்னை சீண்டினாள்
மனதுள் எரிமலை வெடித்தே சிதற
அனைத்தையும் வென்றதாய் ஆனந்தம் வந்ததே.
---- நன்னாடன்.