என் மகள்

கருவில் நீ உருவான நாள் முதல் நீ
எங்களுக்கு தந்த சந்தோசங்கள் ஓராயிரம்

நன்றாக நடக்க தெரிந்த நான்
மீண்டும் நடை பழகினேன்

பிடித்த உணவுகள் எல்லாம் பிரியம் அற்று போக
சுகைக்காத உணவுகள் சுவைத்தன

என் வயிற்றை தடவும் போதெல்லாம்
நீ என் கரம் பற்றுவதை உணர்கிறேன்

பெரிதான வயிற்றில் பேரின்பமாய் நீ
உறங்காத இரவின் கனவெல்லாம் நீ

கைகள் எல்லாம் வளையல்கள் நிறைய
கண்கள் உன்னை காணும் ஆனந்தம்

என்னுள் வளரும் என் வாழ்க்கை நீ
உன் இதழில் தான் விரியும் என் புன்னைகை

உன் தகப்பனை தாய் ஆகினாய்
உன்னக்கு மட்டும் அல்ல எனக்கும்

உன்னை நினைக்கும் போதெல்லாம் பூரித்து போறேன்
நீ என் கையில் தவழும் நாள் வெகு விரைவில்

உனக்கென நான் சேர்த்த நினைவுகள் அதிகம்
ஒன்பது மாதமும் உற்சவம் தான் எனக்கு

என்னுள் நீ வளர்ந்தாய்
உன் தாயாய் நான் வளர்ந்தேன்

என் இனிய காதல் நீ
முகம் காண என் முதல் காதல் நீ

ஆயிரம் முத்தங்களுடன் ஆரம்பம்
எங்கள் தாய்மை

எழுதியவர் : (11-Feb-22, 5:53 pm)
சேர்த்தது : Kavitha
Tanglish : en magal
பார்வை : 112

மேலே