எங்கள் செந்தமிழ்
" *எங்கள் செந்தமிழ்* "
எத்தனையோ பேசுமொழி
என்றிங்கே கண்டாலும்
அத்தனையும் நம்மொழிபோல்
ஆங்கிங்கே-சத்துளதா?
மெத்தனவே பேசுகிற
மேன்மைப் பலமொழிகள்
சுத்தத் தமிழ்முன் சூது .
செழுந்தமிழ் பேசி
செழுமை யடைய
பழுதிலா வார்த்தைகள்
பார்த்தே - எழுதேன்
உழுதே நிலத்தை
உயர்த்திடல் போலே
இழுக்கின்றி யாவு மியற்று.
( *நேரிசை* *வெண்பாக்கள்)*
மரு.ப.ஆதம் சேக் அலி.