முள்ளங்கிக் கிழங்கு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வாதங் கரப்பான் வயிற்றெரிவு சூலைகுடல்
வாதங்கா சம்ஐயம் வன்தலைநோய் - மோதுநீர்க்
கோவைபன்னோய் பல்சிலந்தி குன்மமிரைப் புக்கடுப்புஞ்
சாவுமுள்ளங் கிக்கந்தத் தால்
- பதார்த்த குண சிந்தாமணி
இக்கிழங்கு வாதம், கரப்பான், வயிற்றெரிச்சல், சூலை, குடல் வாதம், காசம், ஐயம், தலைநோய், நீர்க்கோவை, பல்நோய், பல்சிலந்தி, குன்மம், சுவாசம், மூலக் கடுப்பு இவைகளை நீக்கும்