அது ஒரு அழகிய பொற்காலம் 555

***அது ஒரு அழகிய பொற்காலம் 555 ***
அழகிய நினைவு...
பள்ளிகளுக்கென பிரத்தியோக
தயாரிப்பு கையில் நரம்புபை...
நெற்றியில்
விபூதிபோல் முகப்பவுடர்...
அரைகிலோ மீட்டர்
வண்டிப்பாதை கடந்து...
அரைகிலோ மீட்டர் வயல்வெளி
கரும்பு தோட்டம் கடந்தால்...
இருபுறமும் நாணல்
விளையாடும் காட்டாறு...
நண்பர்களுடன்
சிறிது விளையாட்டு...
மீண்டும் வயல்வெளியில்
ஒற்றையடி பாதை...
மீண்டும்
தொடங்கும் வண்டிப்பாதை...
தொலைவில் அழகாய் வரவேற்ற
பள்ளியின் நுழவுவாயில் வளைவு...
இருபுறமும் காகித மலர்க்கொடி
வளர்ந்து வசந்தமாய் காட்சியளித்தது...
வேப்பமர தோப்புக்குள்
ஆங்காங்கே சிமெண்ட் கட்டிடங்கள்...
கண்டுபிடித்தேன்
என் வகுப்பறையை...
எனக்கும் அமர
இடம் கிடைத்தது...
சிலரை தவிர பலருக்கும்
மாற்று பள்ளி இது...
முதல்நாள்
முதல் வகுப்பு ஆங்கிலம்...
ஆங்கில
ஆசிரியரை கண்டால்...
மொத்த பள்ளியே
பயம் கொள்ளும்...
எனக்கு மட்டும் ஏனோ
கொஞ்சம் அதிகமாகவே...
சில நாட்களில்
பல புது நண்பர்கள்...
தாவணி போட்ட
தேவதைகள் வகுப்பறையில்...
மரத்தடியிலே பெரும்பாலான
வகுப்புகள் அங்கே...
மாற்றி மாற்றி அமர மரம்
சாய்ந்துகொள்ள ஏதுவாக...
வீடு திரும்பும்போது
காட்டாற்றில் கிரிக்கெட்...
தாமதமாக தினம்
வீடு திரும்புதல்...
விடுமுறை
நாட்களிலும் வகுப்புகள்...
மாணவர்க்கு
இரவு நேர வகுப்புகள்...
மின்விளக்கு வெளிச்சத்தில்
மரத்தடியில் பாடம்...
நண்பர்களோடு
சின்ன சின்ன சண்டைகள்...
சில தேவதைகள் சிரிக்கும்
சில தேவதைகள் முறைக்கும்...
சொந்த தமைக்கையானாலும் உரையாட
கட்டுப்பாடு பள்ளி வளாகத்தில்...
ஜாடை கட்டி பேசும்
சில தேவதைகள்...
முகம் சுழித்து சொல்லிவிடுவேனென்று
மிரட்டும் சில தேவதைகள்...
அந்த
இறுதிநாள் பிரிவு...
கலங்கிய
நண்பர்கள் தேவதைகள்...
அந்த பசுமையான நினைவுகள்
இன்னும் நெஞ்சில் பசுமையாக...
பள்ளி நாட்களை
நினைத்தாலே...
கண்களில் எட்டி பார்க்கும்
கண்ணீர்த்துளிகள்...
கனகாணும் காலத்தில்...
அது ஒரு
அழகிய பொற்காலம்.....
***முதல்பூ. பெ. மணி .....***