பால் நேச ராஜன் 18022022

பிப்ரவரி.. நாட்கள் இருபத்தெட்டு..
தேதி இன்று பதினெட்டு...
நண்பன் பால் நேச ராஜனின்
பயணங்கள் தொடரட்டும்
என்றும் வெற்றிகளைத் தொட்டு...

பால்... குழு மகிழ்கிறது
உன் அன்பால்...
ஒற்றுமையுடன் பயணிக்கிறது
உன் இனிய பண்பால்...

தமிழகத்தின் தென்கோடி
உன் பிறப்பிடம்... வடகோடி
உன் இருப்பிடம்... எவ்விடமும்
சிறப்புறும் நீ இருக்கும் இடம்...

ஜிஸிஇ'86... அது
நட்பு தேசத்து தோழமை நந்தவனம்..
இன்று மகிழ்கிறது... பாலுக்கு
வாழ்த்துப் பூக்கள் சொரிந்து..
உள்ளம் மகிழ்கிறது இது தெரிந்து..

வானமும் வசந்தமும் வசப்பட
பால்.. வாழ்க பல்லாண்டு..
வளங்கள் எல்லாம் பெற்று...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
👍👏🌹💐🙏😀🍫

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (18-Feb-22, 3:08 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 83

மேலே