துள்ளும் மான்விழி உனதடி

உன்ஏக்கம் எனைக் கொல்லுதடி
உள்ளாற ஏதோ ஏதோ ஆனதடி

உன் விழிவீச்சு எனை வழிமறிக்குதடி
உலக சுழல் சாய்அச்சு உனைசுற்றதடி

காதல் இளவரசி நீயடி உலகில் அவ்உலகை கட்டிஆளும் பேரரசன்
நானடி

துள்ளும்மான் விழி உனதடி அதனை
அள்ளும் அன்புதான் எனதுதானடி

புரவிபோல ஓடும் யென்மனதினை
ஆமைபோல ஆக்கியது
உந்தன்அழகுதானடி

விழியால் சுட்டதுபோதுமடி ஊர் பழிவரும்முன் வழிவகை கூறடி

எனைக்கண்டு இன்னும்நாணம்தான்
ஏனடி
உனைக்காணா என்கண் உருகுதடி

வந்துவிடு அத்தைமகளே ...ஓர் அனுமதியை தந்துவிடு ...உனை

கைப்பிடிக்க காத்திருக்கும் மாமன் மகனின் மனதுதான் இது..
அறியாயோ நீயடி....

எழுதியவர் : பாளை பாண்டி (19-Feb-22, 8:59 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 336

மேலே