பெரிய இறைவன்

நிலைமண்டில ஆசிரியப்பா

பூச்சியும் புழுக்களும் அரவமும் ஆமையும்
நீரினால் தோன்றிட புவியோ நீரினுள்
பன்னெடுங் காலமாய் அமிழ்ந்ததால் குளிர்ந்திட
செடிகளும் கொடிகளும் மண்டியே எங்குமே

அனல்மிகு நெருப்பால் பூமியோ தகித்திட
குளிரும் சூடும் வாயுவை ஆக்கிட
வளர்சிதை மாற்றமோ சிறியதை பெரிதாய்
மாற்றியே வளர்க்க ஆனதே மாவுயிரே

உருண்டை பூமியில் நடுவிலே நெருப்பும்
மேற்புரம் வறண்டே கடினமாய் நிலைக்க
கதிரவன் ஈர்ப்பினால் புவியும் சுற்றிட
அழுத்தம் கொண்டதால் மலையும் ஆனதே

மலையும் வான மேகத் தையையே
தடுத்தும் நிறையவே மழையையும் பொழிந்திட
செய்தும் அருவியாய் வழிந்திட எழிலாய்
தெரிந்தது இறைவன் உருவாய் மலையுமே

கதிரவன் மறைவும் திங்கள் உதயமும்
இறைவன் தலையில் சூடிய மலராய்
மலையை நோக்கும் போதினில் தெரிய
பெரிய இறையாய் தொழுதனர் மனிதரே
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (23-Feb-22, 8:10 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : periya iraivan
பார்வை : 75

மேலே