விடியட்டும் விடியல் விழுந்தே மறுபடியும் பிறக்கட்டும் மழைத்துளிகள்
வான் மழையே;
வந்த மழையே;
விழுந்தே மண்ணை நனைத்த
தேன் மழையே;
பால் நிலவும் பழுக்கட்டும்,
பட்ட சூரியனும் துடிக்கட்டும்,
வான் மழையே,
வந்தே மீண்டும் பொழிந்திடு மழையை;
விழுந்தே ஓடிடு;
நதியாய் பிறந்து, உருண்டே ஓடிடு;
மலை மேடு முகடுகளில்;
நடந்தே சென்றிடு,
சமவெளியில் பாய்ந்திடு;
நதியே, நதியில் வழிந்த நீரே,
நீரில் மிதந்த துளியே!
விண்ணைப் பிளந்து,
விழுந்தே ஓடி விரைந்தே வந்து,
பிளந்த பள்ளத்தில் விழுந்து,
தவழ்ந்த மழையே;
வந்து,
தள்ளாடிய பயிரை வளர்த்து,
மண்மடியில் அமர்ந்து,
மண்ணினுள் புகுந்து,
குளத்தில் கொப்பளித்து,
குதுகலமாய் குட்டையில் வடிந்து,
தெப்பமாய் நிறைந்து, ஏரியாய் விரிந்து,
வடிகாலில் விழுந்து,
எழுந்த குழியெல்லாம் நிறைந்து,
காடு கழனியில் திரிந்து
மீண்டும் நதியாய்ப் பிறந்து,
உவர்ப்புக் கடலில், ஊடல் கொண்டு,
ஈரம் சொட்டிய காற்றாய்,
நீர் கொண்ட மேகமாய்,
ஆகாயத்தை நனைத்து,
மீண்டும் பிறந்தாய் மழையே,
சாரளாய் துரளாய் மழையாய்,
வெள்ளமாய்.
அன்னை தந்த பால்த்துளியில்,
தளிர்த்தது குழந்தை,
விண்தந்த துளியில்,
பூமியில் ஜீவன்கள் தலைத்தது.
தாங்கியது மழலையை அன்னை அங்கே;
இங்கு தாங்கியது மழையை மண்ணே;
பாசத்தை சுமப்பது அன்னையின் கரமே
பெண்மையை சுமப்பது உன்மையில் பெண்ணே;
வெண்மையை சுமந்தல் வரும் சின்னமே
மென்மையை சுமந்தால் வரும் இன்பமே
உண்மையை சுமந்தால் வரும் உய்வே
ஆகாயத்திற்குத் தெரியுமா,
மழையின் அதிசயம்.
அந்த தாமரைக்கு தெரியுமா மடல் விரியும் ரகசியம்
மனிதனே உனக்கேன் அலட்சியம்,
ஆகாயத்தில் தானாய் உதிக்கவில்லை,
தூவும் மழைத் துளிகள்.
சுடும் சூரியன் தந்த கொடையது;
கொடுந்தே சிவந்த வானமது;
தழுவட்டும் தழுவட்டும் மழை மேகங்கள்;
தூவட்டும், தூவட்டும், தூவானம் தூவட்டும்;
தாவட்டும் தாவட்டும் வசந்தம் வந்தே பிறந்து தாவட்டும்;
விடியட்டும் விடியட்டும் புதுப் புது விடியல் பூலோகத்தில்
நித்தம் நித்தம் சப்தம் இன்றி;
விதையுங்கள் விதையை,
வளரட்டும் மரம் செடி கொடிகள்,
வரட்டும் காற்றும்,
நீராய் உருமாறட்டும், பருவமழை
வந்தே நனைக்கட்டும் மண்ணை.
விதையுங்கள் மனதில் நல்லெண்ணம் என்னும் விதையை;
தூவுங்கள் இரக்கம் என்னும் கருணையை;
வளரட்டும் மனித நேயம், மரம் செடி கொடிகள் போன்று
மணக்கட்டும் மண்ணில் மன்னியம்;
விண்னென்ன விளை நிலமா,
மண்ணென்ன மழைக்குடமா,
மனம் என்ன கவலையை சுமக்கும் மனக் குடமா;
பெண்னென்ன கண்ணீர் சுமக்கும் குவளையா
அன்பென்ன பேரின்ப வதையா
பிறக்கட்டும் பெண்மைமீது கண்ணியம்
பொழியட்டும் அன்பென்னும் பெருமழை
மண்டட்டும் உறவுகள்;
மறுபடியும் பிறக்கட்டும்
மழை துளிகள்.
விடியட்டும் விடியல்;
விழுந்தே பிறக்கட்டும் உதயம்;
வடியட்டும் சோகங்கள்;
முடியட்டும் குரோதங்கள்;
தொடரட்டும் உறவுகள்
தொழுவட்டும் விடியலை கரங்களும்
மறுபடியும் பிறக்கட்டும் மழைத்துளிகள்.
அன்பன் அ. முத்துவேழப்பன்