படிகள்

முயற்சியின் படிகளே
கடந்த காலத்தின் வறுமையே மாற்றி
வாழ்க்கைக்கு பெருமை சேர்க்கும்
தரமான பயிற்சிகள் செய்
தவறான அலட்சியம் கொள்ளாதே...

முதல் படி ஏறியதும்
முன்நிற்பவர்களை எதிர்கொள்ள
மூலதனமாக நம்பிக்கையே விதைத்திடு
முட்களாய் துரோகங்களை கிள்ளி எறிந்திடு
முன்னேற்றம் காண அது உறுதியளித்திடும்

அடுத்த படி ஏறியதும்
காயங்களினால் வலித்திடலாம்
தளர்ச்சியில் நின்று விடாதே
வளர்ச்சி தொலைவினில் சென்றிடும்
விழி திறந்து உன் நோக்கத்தை உணர்ந்து
தாக்கத்தை கடர்ந்திடு

உயரத்திற்கு சென்றதும்
பயனளித்த படிகளை மறந்துவிடாதே
பிடிகளாய் ஏற வைத்ததும் அதுவே
அடிகளாய் தள்ளிவிடுவதும் அதுவே
ஒவ்வொரு வளர்ச்சியிலும்
கவனம் தேவை
கர்வம் அல்ல

எழுதியவர் : Maha Lakshmi (26-Feb-22, 11:28 am)
சேர்த்தது : MAHA LAKSHMI
Tanglish : padigal
பார்வை : 89

மேலே