பேரின்பம் எது

வருவதும் உறவாய் சேர்வதும் போவதும்
போகையில் சேர்த்த உறவோடு போவதும்
எல்லாம் நிஜமே நிஜமென்னும் மாயவலைக்குள்
காலமெனும் அழியா பிடியின் சூழலில்
இயங்கும் வாழ்க்கையெனும் மெய்யா பொய்யா
என்று நம்மை திகைக்கவைக்கும் மாயம் இதுவே
இதை அறிந்து கொண்டால் ஆசையும் பற்றும்
இதுவே என்று புரிந்து கொண்டால்
புத்தன் காட்டிய வழி தெரியும் நம்கண்முன்னே
அதற்குமேல் ஒரு படி சென்று
பற்றற்றான் பாதம் பற்றிட மீண்டும்
உலக வாழ்வெனும் துன்ப சமுத்திரத்தில்
மீண்டும் பிறந்து மீள துயரத்தில்
கரை சேர வழி தெரியாது துஞ்சிட மாட்டோம்
இறை என்னும் பேரின்பம் துய்த்த பின்னே .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Feb-22, 9:55 am)
Tanglish : perinbam ethu
பார்வை : 140

மேலே