அவள் விழிகள்

கண்ணே உந்தன் விழியின் அழகை
எவ்வாறு விவரிப்பேன் என்று எண்ணுகையில்
எதிரே வந்து துள்ளி சென்றது ஒரு மான்...
அக்கணமே நான் எழுதினேன் ....கண்ணே
உன் விழியால் உன்னை 'மான்விழியாள் '
' ம்ருக நயனி என்பேன் நான் என்று
அதை படித்து அவள் கேட்டாள்
' அன்பே இரண்டும் வேறல்லவே பின்
'ஏன்;' இரண்டால் என் விழிக்கு இப்பெருமை'
அதற்கு நான் சொன்னேன் 'தீந்தமிழில்
'மான்விழி' ஒரு சொல் என்றால் கேட்க
இனிமை சேர்க்கும் 'ம்ருக நயனி'
அழகு மிளிரும் வட சொல்' ஆகா
இரு மொழியால் உன் விழிக்கு நான்
அர்பணித்தேன் சொற்கள் இவற்றை
'ஏற்பாயா' என்றேன் .....புன்னகைத்தாள்
'அப்படியே கட்டி அணைத்தாள் என்னை
சம்மதம் இதுவே என்பதுபோல்

'ஏற்பாயா என்றேன்....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Mar-22, 8:47 pm)
Tanglish : aval vizhikal
பார்வை : 229

மேலே