வருவாயே

உன் நினைவே எனக்கோர் சிறையே
உன் கனவே எனக்கோர் சுமையே
பல பல ஜென்மம் நானெடுப்பேன்
உனைத்தேடி வந்து மெய்கலப்பேன்
நானே உனக்கே உயிராவேன்.

பொன் நிலவில் உந்தன் முகமே
வான் வரையில் நீளும் தினமே
தாய் மடிதேடும் சேயானேன்
வாய் விட்டு அழுது நோயானேன்
வாழ்வை இழந்தே பேயானேன்

என் விழி மூடியே நான் கிடந்தேன்
உன் விழி காணவே தவித்திருந்தேன்
சிறு சிறு துன்பம் நானடைந்தேன்
சிறகொடிந்து மண்ணில் தான்விழுந்தேன்
கண்ணே மணியே வருவாயே

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (15-Mar-22, 7:40 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : varuvaaye
பார்வை : 180

மேலே