பள்ளி நாட்கள், நினைவிருக்கா

காலைப் பேருந்தில்,
பின் இருக்கையில் நீ
முன்வாயிலில் நான்...
காற்றும் புக முடியாக் கூட்டம்
இருந்தும் பேசியது,
எத்தனை வார்த்தைகள்
விந்தை தானடி !

பிரேயர் கூட்டத்தில்,
எங்கே உன் முகம் !
பத்தே நிமிஷமும்
ஆனதே வருஷமாய் !

வள்ளல் ஆனேன்,
உணவு வேளையில் !
ஒரு வாய்ச் சோறு
உன்னிடம் வாங்க !
எனக்கும் சேர்த்து
எடுத்தே வந்தாயடி !

பாடம் கேட்பதா,
நான் மனதில் பாடும்
பாடல் கேட்பதா,
உன் குழப்பம் கண்டேனடி
கண் கருவிழி அசைவினிலே !

மரத்தடி வகுப்பில்
மண்ணில் கிறுக்கியதை
மறைக்க, மறந்தே போனேனடி !
மாலை வேளை
மழை வந்து நனைத்து
மானம் காத்தது, மத்த கதை !

உன் பின்னே வந்து
பேச நினைக்கையில்
சைக்கிளின் சங்கிலியும்
கழண்டே போனதடி !
தள்ளிச் சென்ற போதும் !

உன்னை நினைத்து
எந்தன் முதல் கவிதை,
நண்பனின் கண் பட,
உனைச் சேராமலே கிழிந்ததடி !
அந்த பல நாள் முயற்சி
தீர்ந்த நாள் நீ அறிவாய் !

திருவிழாக் காலத்
தேர் இழுக்கும் சாக்கில்
வீடு வரை வந்தேன்,
நீல வெள்ளைத் தாவணி
கண்டு சலித்த கண்ணுக்கு,
வானவில்லின் தோரணமாய்
வந்து நின்றாயடி !

பஸ் பாஸ் இருந்தும்
மாலையில் நடந்தோம்,
கூடுதல் நேரம்
கூடவே இருக்க !

வீக் என்ட் விடுமுறை !

தேவை தான்!
வேகத்துக்கு தடையாய் !

தேவை தான் !
எண்ணி மகிழவும்,
ஏங்கித் தவிக்கவும் !

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (15-Mar-22, 6:46 pm)
பார்வை : 247

சிறந்த கவிதைகள்

மேலே