சாருலதா அத்யாயம் 6
20 / 04 / 79 .
இன்று.....எங்க பிரிவுபச்சார நாள்....'பசுமை நிறைந்த நினைவுகளே...பாடித் திரிந்த பறவைகளே'....' மூழ்காத ஷிப்பே பிரெண்ட்ஷிப்த்தான்' என்று ஒவ்வொரு மாணவர்களும்...மாணவிகளும் ஒருவித மௌனத்தோடும்.. சந்தோஷத்தோடும்... சோகத்தோடும்.... MBBS முடித்துவிட்டோம் என்கின்ற கர்வத்தோடும் நெகிழ்ந்த நேரத்தில்
"இப்போது 'GENERAL MEDICINE' ல 'GOLD' மெடலை இரண்டு பேர் பகிர்ந்து கொள்கிறார்கள்....." ஒரே கரகோஷம்.... கைதட்டல்.... விசில்....
" Dr.சித்தார்த்தன்.....Dr. சாருமதி இருவரும் டயஸுக்கு வாங்க "
Dr MGR யுனிவர்சிட்டி Vice - Chancellor மெடலை அவர்கள் கழுத்தில் அணிவித்தார்.
பிறகு 'GENERAL SURGERY'யில் 'GOLD' மெடல் Dr.சித்தார்த்தன்
' OG 'யில் GOLD Dr.சாருமதி.....
"கொஞ்சம் இருங்க...கொஞ்சம் இருங்க...'BEST OUT- GOING' ஸ்டுடண்ட்ஸா நீங்க ரெண்டுபேர்தான் தேர்வாயிருக்கிறீங்க.அந்த மெடல்களையும் வாங்கிட்டு போயிடுங்க."
விசிலாலும் ....கைதட்டலாலும் அந்த அரங்கமே அதிர்ந்து....ஒரு குலுங்கு குலுங்கி ஓய்ந்தது.
தலைமையுரையாற்றிய Vice - Chancellor " டியர் எங் டாக்டர்ஸ் ... கொலீக்ஸ் அண்ட் ரெஸ்பெக்ட்புல் பேரன்ட்ஸ் நல் வாழ்த்துக்கள். நம் கல்லூரிக்கு மாத்திரம் அல்ல நம் யுனிவர்சிட்டிக்கே புகழையும்...பெருமையையும்...நல் மதிப்பையும் பெற்றுத்தந்த இந்த இளம் டாக்ட்டர்களை நான் உளமார பாராட்டுவதுடன் மனமார வாழ்த்தவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
இவர்கள் காலத்தில் நான் Vice - Chancellor இருந்ததற்கு நான் கொடுத்துவைத்திருக்கிறேன்.இந்த குழந்தைகளுக்கு இறைவனுடைய துணையும்...பூர்ண ஆசியும் என்றென்றும் கிடைத்திட வேண்டுமென நான் மனதார பிராத்திக்கிறேன். இவர்கள் இருவரும் மற்றவர்களைப்போல் வெளிநாடு சென்று செட்டில் ஆகாமல் நம் நாட்டில்...நம் மண்ணில்...நம் மக்களுக்கு தொண்டாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டும் இல்லாது அவர்களின் ஞானம்....அறிவு...அனுபவம்....
எல்லாவற்றையும் நம் மக்களுக்கு பகிருமாறும்...மற்ற டாக்ட்டர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குமாறு கேட்டு கொள்கிறேன். ரொம்ப 'selfish'ஆகத் தோணலாம்.இது என் சொந்த விருப்பம்...ஆசை...கனவு....ஏன் கொள்கையின்னுகூட சொல்லலாம். வேண்டுகோள்தானே தவிர ஆர்டர் இல்ல. இவர்களை பார்க்கிறபோது வேறொன்றும் என் மனதில் தோன்றுகிறது. Dr.சித்தார்த்தன் ,Dr. சாருமதி சொல்லட்டுமா? ஆனா ஒரு சஜஷன்தான். எல்லா மெடல்களையும் பங்கு போட்டு கொண்டதைப்போல உங்கள் வாழ்க்கையையும் ஏன் பங்குபோட்டுகொள்ளக் கூடாது.....?"
ஓ....ஓ.....சித்தார்த்தா....சித்தார்த்தா ....
சிந்திச்சிப்பாரு சித்தார்த்தா....
சாருமதி....சாருமதி....
கொஞ்சம் சித்தார்த்தையும்
பாருமதி......பாருமதி...."என்று ஒரே கூச்சல்.
நானும் சாருமதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது....ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. ஏனென்றால் அதே எண்ணம் ...வெகு நாட்களுக்கு முன்பே என்னுள்ளே முளைவிட்டு...துளிர்விட்டு....மரமாகி பூத்து குலுங்கி கொண்டிருக்கிறதே .... ஆனால் அவள் இதை எப்படி எடுத்துக்கொள்வாள் என்று தெரியவில்லையே? என்னுள்ளே அவள் இருப்பதுபோல் அவள் மனதில்....ம்கூம் தெரியாது. தெரிந்துகொள்ளவும் தயக்கம்.ஒரு வேளை நான் கேட்டு அவள் வேறேதாவது சொல்லி விட்டால்....என்னால் தாங்கவே முடியாதே....என்ன செய்ய? தக்க சமயம் வரட்டும்..
ஓ....அழகு தேவதையே
நீ என்னருகில் இருந்தால் குளிர்கிறாய்...
என்னை விட்டு நீங்கியிருந்தாலோ சுடுகிறாயே...!
உன் விழிகள் CT ஸ்கேனா என்ன?
என் இதயத்தை ஸ்லைஸ்...ஸ்லைசாக
வெட்டி வெளிக்கொணர்கிறதே...!
உன் அழகை நான் ஆராதிக்கிறேன்...
உன் அறிவை நான் வியக்கிறேன்...
உன்னால் மட்டும் எப்படி
இவ்வளவு தெளிவாக.....?
காதல்...
ஆம். நான் மட்டும்தான் உன்னை
காதலிக்கிறேன் . எங்கே
நீ இல்லையென்று மறுத்துவிடுவாயோ
என்றுதான் எனக்குள்ளெயே நான்
புதைந்து போகிறேன்.
புகைந்தும் போகிறேன்....
இன்று எனக்குள் என்ன நேர்ந்துவிட்டது?
ஏதோ ஒரு இன்பம்....
ஏதோ ஒரு சந்தோஷம்....
ஏதோ ஒரு கிறக்கம்...
ஏதோ ஒரு இறுக்கம்....
ஓ....எல்லாம் ஒரு பொருள்தானோ.....!
எப்படியோ என்னையும் கவிஞனாக்கி விட்டாய்...
இப்படி என்னை கிறுக்கவும் வைத்துவிட்டாய்....
காலம்தான் கைகூடுமா?
கதவுகள்தான் திறக்குமா?
காட்சிகள்தான் கிடைக்குமா?
ச்சே...என்ன இப்படி ஏதேதோ பிதற்றி கொண்டிருக்கிறேன்.என்னதான் இருந்தாலும் Vice - Chancellor அப்படி அப்பட்டமா சொல்லி இருக்க கூடாதுதான். அதுவும் அத்தனை கூட்டத்துக்கு முன்னால்....அவள் மனது என்ன பாடுபட்டிருக்கும்? ஆனா எனக்கு ஒருவிதத்துல நல்லதாய் போச்சு.என்னுளே புதைந்து கிடந்த என் எண்ணங்கள்....என் காதல்.....என் கனவுகள்..... எப்படியோ அவளுக்கு மாத்திரம் இல்லாம இந்த உலகத்துக்கே பூடகமாவது தெரிஞ்சிடுதுல்ல. மனம் முழுக்க சந்தோஷத்தோடும்....புன்சிரிப்போடும்....கனவுப்பூக்களோடும் உறங்கிப் போனான் சித்தார்த்தன்.
தொடரும்.