சாருலதா அத்யாயம் 7

21 / 04 / 79
"சித்தார்த்தன்....சித்தார்த்தன்..." அவள்தான்.
"சாருமதி...வா...வா... என்ன விஷயம்?"
" நேத்து என்னால சரியா தூங்கவே முடியல...."நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். இதோ....இப்போ....இப்போ....சொல்லிவிடுவாள். இதோ...இதோ...வந்துவிட்டது.( ச்சே...மடையா. நீ ஆம்பள. நீயே சொல்லத் தயங்கும்போது அவள் எப்படிடா?....) என் இதயமோ எல்லைமீறி ...வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. வார்த்தைகள் .... தயங்கித் தயங்கி
" ஏன் சாருமதி...."
" இல்ல நேத்து Vice - Chancellor பேசினதலிருந்து எனக்கு மனசே சரியில்ல.அவர் அப்படி பப்ளிக்கா சொல்லியிருக்க கூடாதில்ல..
எனக்கு ரொம்ப சங்கடமா போச்சு.என் பிரெண்ட்ஸுங்க வேற என்னை உண்டுஇல்லைனு பண்ணிட்டாங்க. நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்கலையே....அப்படி தப்பாயிடுமோன்னுதான் உங்களை பாத்துட்டு போலாம்னு வந்தேன்..."
"தப்பாவா?....நானா?.... அட கடவுளே இது என்னடா இந்த மதுரைக்கு வந்த சோதனை?...( டேய் நல்ல சான்ஸடா..அக்கம் பக்கம் யாரும் இல்லடா.. சொல்லு...சொல்லுடா...) அதது...அவங்க அவங்க தலையெழுத்தைப்போலத்தான நடக்கும். நம்மால என்ன செய்யமுடியும்?...( போச்சுடா....ஸ்...ஸ்...கண்ணைக்கட்டுதே...)
"இல்ல...நீங்க ஏதாவது தப்பா நெனைச்சிடுவீங்களோ என்னவோன்னுதான் எனக்கு கஷ்டமா போயிடிச்சு. அதனாலதான் என்னால நேத்து ராத்திரி சரியா தூங்க முடியல. சரி...சரி...அதவிடுங்க நடந்தது நடந்திடுச்சி...நீங்க மேல என்ன படிக்க போறீங்க ? உங்க பியூச்சர் பிளான் என்ன? நர்சிங் ஹோம் ஏதாவது கட்ட போறீங்களா? இல்ல ஹையர் ஸ்டடீஸ் ....என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?"
"எனக்கு கொழந்தைங்கன்னா உசுரு.ரொம்ப....ரொம்ப...பிடிக்கும்.அதனால பீடியாட்ரிக்ஸ் படிக்கலாம்னு இருக்கேன். எது கிடைக்குதுன்னு பார்க்கலாம்?...நம்ம கையில என்ன இருக்கிறது?....நீங்க......?"
" எங்களுக்கென்ன.... OG யை விட்டா வேற கதி. எனக்கும் அதுல இன்ட்ரஸ்ட் இருக்கு.பார்க்கலாம். சரி...சரி... ALL THE BEST
என்னையும் கொஞ்சம் நினைவுல வெச்சுக்கோங்க.. மறுபடியும் எப்பவாது சந்திப்போம்...... மறந்துடாதீங்க"
"மறக்கறதா?.....உன்னையா?......நடக்கற காரியமா?....ச்சே....சரியான சந்தர்ப்பத்தை விட்டு விட்டோமே .'Opportunity knocks the
door once.....once only in your life time ' என்ன மடையனா இருப்பேனோ தெரியல .இந்த Centuryல கூட இப்படி ஒரு ஜென்மம்....
காலம் வேகமாய் உருண்டது. நானும் MD பீடியாட்ரிக்ஸ் முடித்தேன். அவளும் MD., DGO முடித்தாள். ஆனால் இன்னமும் என்னால் என் காதலை வெளிப்படுத்தமுடியால.

THODARUM

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (17-Mar-22, 10:24 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 92

மேலே