வெறியா கெறல் இக்கட ரா
வெறியா கெறல், இக்கட ரா.
(அந்த நேரம் அங்கு வந்த நண்பன்): வெற்றி இங்க வாடா வெளியிலே.
என்னடா வாசு? (வெளியில் வந்து)
இப்ப என்னமோ சொன்னியே அதைத் திரும்பச் சொல்லு?
வெறியா கெறல் இக்கடா ரா.
என்னடா? இதுக்கு என்ன பொருள்?
என் மனைவியோட தாய்மொழி தெலுங்கு. தமிழ் நாட்டில பொறந்து வளர்ந்தவங்க. காதலிச்சுத் திருமணம் பண்ணீட்டோம். உனக்குத்தைதான் தெரியும தெலுங்க்காரங்த கணணீர் வர்ற அளவுக்கு காரத்தை உணவில் சேர்த்துக்கிறவங்க. நானும் பழகிட்டேன். காரம் அதிகம் சாப்படறதால குடும்பத்தில சின்னச்சின்ன ப் பிரச்சனைகளுக்கும் (இ)ரண்டு பேருக்கும் கடுமையுன கோபம் வரும். மூக்கு சிவக்க என் மனைவி கடுமையான வார்த்தையில திட்டிகிட்டே மத்துக்கட்டையைத் தூக்கிட்டு என்னை தாக்க வருவாங்க. நான் வெளில ஓடி வந்திடுவேன். அவுங்க கோபம் தணிய அரைமணி நேரம் ஆகும். அப்பறம் வீட்டுக்குப் போய் வாசப்படில நிக்கறபோதே அவுங்க கையில ஒரு தம்ளர்ல பழச்சாறை வச்சிட்டு 'ரண்டி மாமா'னு கொஞ்சலாக் கூப்புடுவாங்க. நானும் செல்லமா அவுங்களை 'வெறியா கெறல் இக்கடா ரா'னு சொல்லுவேன். அவுங்க வாசல்படிய நோக்கி வருவாங்க. நான் பழச்சாறை வாங்கிக் குடிச்சு முடிஞ்சதும் என் கையைப் பிடிச்சு இழுத்திட்டு வீட்டுக்குள்ள போவாங்க.
அது சரி. 'வெறியா கெறல்'னா அர்த்தம்.
'வெறியா' வெறிபிடிச்ச.
சரி.கெறல்?
Girl. ஆந்திரா மற்றும் தெலுங்கானவில் கேர்ல் என்பதை 'கெறல்'னுதான் உச்சரிப்பாங்க.
ஓ... அப்பிடியா. 'இக்கடா ரா'ன்ன இங்கே வா'.
சரியாச் சொன்னடா.
'ரண்டி'?
'வாங்க'.
நல்ல குடும்பச் சண்டைடா வெற்றி. சப்பாசு