சாருலதா அத்யாயம் 8
ஜூலை '82
லண்டன்.....சென்று மேல் படிப்பு படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.அப்போதுதான் அப்பா எனக்கு பெண் பார்த்திருந்ததை பற்றி கூறினார். அப்போதே அவர்களிடம் உண்மையை சொல்லிவிடலாம் என்று நினைத்தபோது ......அவர்கள் என் மீது வைத்திருந்த பாசம்.....நம்பிக்கை....என்னை ஊமையாய் கட்டிபோட்டுவிட்டது. போனோம்....லதாவை பார்த்தேன். என்னவோ தெரியவில்லை,பார்த்தவுடன் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டாள். அப்போ சாருமதியின் மேல் நான் வைத்திருந்த காதல்....ஓ...அது ஒரு infatuationஆ....ஒரு மரியாதையா?....இல்லை வெறும் ஈர்ப்பா....இல்லை...இல்லை...அதுவும் உண்மை....இதுவும் உண்மை. என்ன விந்தையடா இது.தைரியமாக சாருமதியைத் தேடிப்போனேன். அவள் எங்கோ வடக்கே போய்விட்டதாக தகவல்தான் கிடைத்தது.சரி கொடுத்துவச்சது அவ்வளவுதான். சாருமதிக்கு இனி ஒரு பெரிய புல்ஸ்டாப். மனதை அலைய விடக்கூடாது.இனிமேல் எனக்கு எல்லாமே லதாதான். கல்யாணமும் முடிந்தது....இதோ லண்டனில்.....
"ஏங்க.....காலைலதான் ஹாஸ்ப்பிட்டல்...ஹாஸ்ப்பிட்டல்னு போறீங்க...கடுமையா உழைக்கிறீங்க .சரி போகட்டும்னு பார்த்தால் ...ராத்திரியில்கூட ஏதாவது எழுதிகிட்டே இருக்கீங்க....வாங்க ...வாங்க...."
"இல்லைடா செல்லம்.டைரிதான் எழுதிக்கிட்டு இருக்கேன். முடிஞ்ச வரைக்கும் தினமும் எழுதிவிடுவேன். பழக்கமாயிடுச்சு. அதான்... இதோ முடிச்சிட்டேன்."
"சரி...சரி...எழுதின வரைக்கும் போதும்..வந்து படுங்க...ரெஸ்ட் வேணாமா? வாங்க...வாங்க.."
படுத்தவுடன் தூங்கிப்போனான். திடீரென்று....எதோ நெருடியதால் கண் விழித்தான். லதா அவனையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவள் கண்களில் அருவியாக கண்ணீர். பதறியடித்துக்கொண்டு எழுந்த சித்தார்த்தன்..
"என்னடா செல்லம்.... என்னது இது...ம்ம்ம்ம்ம்...."
"என்னை நீங்க மறந்திடுவீங்களா?"
"ச்சே....என்ன பேசற நீ ....மறக்கறதா?...உன்னையா?...இந்த ஜென்மத்திலா?...."
" அப்போ...அடுத்த ஜென்மத்தில மறந்திடுவீங்களா?......"
"ஐயையோ...இது என்னடா வம்பாபோச்சி..ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்."
"எனக்கு நீங்க வேணும்...நீங்க மட்டும்...FULL ஆ......FULL ஆ வேணும்" என்று அவனை மார்போடு இறுக்க அணைத்துக்கொண்டாள்.தாரை...தாரையாய் கண்களில் கண்ணீர் வழிய விசும்பினாள்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. மார்பில் சாய்ந்த அவளின் கூந்தலை இதமாக வருடிக் கொடுத்தான்.
"ஏங்க நமக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஓடிடுச்சு. நமக்கும் கொழந்தைகளில்லை. நான் ஒன்னு சொன்னா கோச்சிக்கமாட்டீங்களே....!
"சொல்லு...."
"நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் செஞ்சிக்கக்கூடாது?"
சட்டென அவளை நிமிர்த்தி....ஆழமாய்....கண்ணோடு கண் வைத்து ஊடுருவிப் பார்த்தான்.
"என்ன லதா இது? என்ன பேசற?.....புரிஞ்சிதான் பேசரியா?.நான்தான் அப்பவே சொல்லிட்டேனே. பொறந்தா சந்தோஷம்தான்.இல்லைனா எனக்கு நீ கொழந்த....உனக்கு நான் கொழந்தேன்னு...."
" அதுக்கில்லீங்க ......ஏன் அதையும் ட்ரை செஞ்சிப் பார்க்க கூடாதுன்னுதான். அதல என்னங்க தப்பு?"
"சரி...லதா. நானும் ஒத்துகிறேன். நானும் ஒன்ன ஒன்னு கேட்கட்டுமா? என்னாலதான் உன்ன தாயாக்க முடியல? நீ ஏன் இன்னொரு கல்யாணம் செஞ்சிகிட்டு ட்ரை பண்ண கூடாது?
"சிவா....சிவா...." என்று இரு காதையும் பொத்திக்கொண்டாள்.
"அதனால .....இந்த பேச்சுக்கு இனிமே இடமே இல்லை. அதுக்கு ஒரு பெரிய புல் ஸ்டாப்பா வெச்சிட்டு...இனி இந்த மாதிரி பெனாத்தறத விட்டுட்டு...அந்த எண்ணத்தையே மறந்துட்டு....சந்தோஷமா இரு.சரியா? என்று அவளை இறுக்க அணைத்துக்கொண்டு கண் மூடினான்.
அடுத்த நாள் விடிந்தது. அவன் ஹாஸ்ப்பிட்டல் போனவுடன்...அவனது அத்தனை டைரிகளையும் எடுத்துப் படித்தாள்.அந்த பெரிய புல்ஸ்டாப்புக்கு பிறகு லதா...லதா...எந்த பக்கம் எடுத்தாலும் லதா...லதாதான்.அவளோடு கல்யாணம் ஆனதிலிருந்து....அவளோடு விமானம் ஏறியதிலிருந்து.....லண்டன் வந்து...அரண்மனை...யூனிவர்சிட்டி....தேம்ஸ் நதிக்கரை.... லண்டன் பிரிட்ஜ்...ஷாப்பிங் மால்ஸ்...ஒரு ஆங்கில கொழந்தைய தூக்கி கொஞ்சியதிலிருந்து....கொழுக்...மொழுக் ....சப்பை மூக்கு சைனீஸ் கொழந்தைய வீடியோ கவரேஜ் செய்தலிருந்து....அவளுக்கு ஜீன்ஸ் பனியன் போட்டு ரசித்ததலிருந்து... லதா.... லதா.... மனம் நிறைந்து விம்மினாள். ஓடிச்சென்று சாமி முன்னாடி உட்கார்ந்து அழுது தீர்த்தாள். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட அவள் ஒரு திடமான முடிவுக்கு வந்தாள். தெய்வத்தின் முன்னே ஒரு சங்கல்பம் செய்துகொண்டாள். நாட்கள் உருண்டன. மூன்று வருட காண்ட்ராக்ட் முடிந்து எப்படா...நம்ம ஊருக்கு போவோம்ன்னு காத்திருந்து.....இதோ....
தொடரும்.