பெரிதாள் பவனே பெரிது அறியும் - பழமொழி நானூறு 82

நேரிசை வெண்பா

பொற்பவும் பொல்லா தனவும் புனைந்திருந்தார்
சொற்பெய்(து) உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்
அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! அறியும்
பெரிதாள் பவனே பெரிது. 82

- பழமொழி நானூறு

பொருளுரை:

வில்லைப்போன்ற புருவத்தின் கீழ்ச் செவ்வரி படர்ந்திருக்கின்ற மிகவும் அகன்ற கண்ணை உடையாய்!

நன்மையையும், தீமையையும் நிரல்படப் புனைந்து மருங்கு இருந்தார் சொற்களால் கூறவும் வேண்டுமோ? எல்லாவற்றையும் தன்வயமாக நடத்தும் அவனே நன்மை தீமைகளை மிகவும் அறிவான்.

கருத்து:

கற்றறிந்தவன் எல்லாவற்றையும் தானே பகுத்தறிந்து நடப்பான்.

விளக்கம்:

சொல் பெய்து எனவே சொல்லுஞ் சொல் பயனின்றாய் முடியுமென்பதாம்.

'பெரிதுஆள்பவனே பெரிது அறியும்' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Mar-22, 7:43 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே