அழகு
திருமணத்தில்
தலைகுனிந்து.... முகம் சிவக்க
உட்கார்ந்திருந்த
உன் அழகை - நான்
ரசித்தேன்.
பின் நம் வீட்டை
நீ நிர்வகிக்கும் திறமை
உன் அழகை கூட்டியது.
மாமியாரின் ஜாடைகளை
லாவகமாய் சமாளித்தபோது
நீ மேலும் அழகானாய்.
இரு வீட்டையும்
ஒரு வீடாய் எண்ணி
நீ பங்காற்றிய பாணியில்
உன் அழகை - நான்
பாராட்டினேன்.
என் ஏற்ற இறக்கங்களில்
தோளோடு தோள் நின்ற
தோழியாய்
உன் அழகை நான்
ஆராதித்தேன்.
பிள்ளைகளையும்...
பெற்றவர்களையும்....
உற்றவர்களையும்....
ஏன்...?
என்னையும் நீ
சீராட்டிய விதம்தான்
உன் உண்மையான
அழகென்று உணர்ந்து
உன்னை நான்
வணங்குகிறேன்.