வாழ்க்கை
வாழ்வில் இன்பம் வந்தால் மகிழ்ந்து
துன்பம் வந்தணைய நொந்துபோகும் மனிதன்
இது இரண்டும் மாறி மாறி
வந்து இன்பமும் துன்பமும் தந்திடும்
பரவுகாலங்கள் ஒப்ப என்று வாழ்ந்திட
பழகிட வேண்டும் எப்படி தாமரை
இலையில் நீர்த்துளிகள் ஒட்டாது இருதல்போல்
தன் பணி செய்து பலன் எதிர்பாராது
வாழ்ந்திடும் வாழ்க்கை வாழ்விற்கு உய்வு
இதுதான் கண்ணனின் கீதோபதேசம்