தவறிய வாழ்த்து
இரண்டொரு வரிகளில் வாழ்த்த நினைத்தேன்.
மனதின் எண்ணங்களை எடுத்துச் செல்ல
ஆகச்சிறந்த மொழி ஏதுமில்லை,...
பேனாவைப் பணித்தேன்
வாழ்த்துமாறு
தயங்கி நின்றது
பேனா
அதற்கும் அங்கே வார்த்தைச் சிக்கல்,...
நேரில் சென்றே வாழ்த்தி விடலாமென்று
மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
காலம் எப்போதும் போல் சதி செய்து
வழக்கமான வேலையை மாற்றி வைத்தது.
அதற்கும் ஒத்துக் கொண்டு
கொஞ்சம்
முன்னதாகவே வந்து
உன் நிறுத்தத்தில்
அரை மணி நேரம்
காத்திருந்தும்
பார்க்க மட்டும் முடியவில்லை...
தவறி போனது வாழ்த்து மட்டுமல்ல
என் மனதும் தான்...
அன்புடன் ஆர்கே ..