சிதம்பரம் 30-03-22

அரை நூறாண்டு முன் ஆச்சி
கை பிடித்து நடந்திருக்கிறேன்...
வீரசிகாமணி... வேப்பங்குளம்
எட்டு கிலோமீட்டர் தூரம்...
அதற்குமேல் அவரது கால்களுக்கு
பயணிக்கத் தெரியாது...

அம்மாவுடன் பேருந்தில் அமர்ந்து
வீரசிகாமணி.. சங்கரன்கோவில்
பதினாறு கிலோமீட்டர்
பயணித்திருக்கிறேன்.. அதற்குமேல்
பயணிக்கத் தெரியாது அம்மாவிற்கு..

சிதம்பரம்.. பரமசிவன் மகன்
முருகன் தந்தையிடம் மாங்கனி
வாங்கிட உலகம் சுற்றினார்...
சிதம்பரமே இங்கு உலகம் சுற்றினார்..
அன்பைக் கனியாய் அமெரிக்காவில்
இருக்கும் மகனுக்கு வழங்கிட...

சிதம்பரம் எடுத்த ஃபிளைட்
டிக்கெட்டிற்கு உண்டு விலை...
மகன் மருமகள் மேல் உள்ள
அன்பிற்கு ஏது விலை...

பட்டங்கள் ஆள்வதும்... சட்டங்கள்
செய்வதும் பாரினில் பெண்கள்
நடத்த வந்தோம்... பாரதி பாடலுக்கு
சிதம்பரம் நல்ல உதாரணம்...

சிதம்பரம் வாழ்க பல்லாண்டுகாலம்
அவருக்கு வானமும் வசப்படும்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
🌹💐😃👍👏🍫

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (30-Mar-22, 10:56 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 78

மேலே