நண்பன்

தனிமைகள் உன்னால் தவிர்க்கப்படுகிறது...
மகிழ்ச்சிகள் உன்னோடு செதுக்கப்படுறது...
என் வலிகளும் உன்னால் தான் தீர்க்கப்படுகிறது ...


கண்கள் குளமாகும் போது
உன் ஒருவனால் தான்
அனைத்தையும் மாற்றியமைக்க
முடிகிறது

என் எண்ணங்களுக்கு
உயிர் கொடுக்கும்
நண்பன் நீ...

நீ இல்லாத ஓர் நாள்
கற்பனையும் செய்ய முடியாது
என்னால்...

தோற்றுப் போகும் தருணங்களிலும் ,
தொலைந்து போகும் தருணங்களிலும் ,
உன்னைப் போல் ஆறுதலளிக்க எவருமில்லை..

உண்மை நண்பர்களை
எங்கெங்கோ தேடி
அலுத்துப் போனேன்
உன்னை அருகினில்
வைத்துக் கொண்டே...
மன்னிப்பாயாக.,

நீ எனக்கானவன்,
என்னில் கலந்தவன்
எனக்கான ஆறாம்விரல் ...

நீ ....
என் பேனா

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (2-Apr-22, 3:58 pm)
Tanglish : nanban
பார்வை : 335

மேலே