வீட்டுடைப் பெண்கள் விருப்பு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கணவனுந்தன் சொற்கேட்டுத் தான்கேட்ட தெல்லாம்
பிணக்கின்றி வாங்கி(த்)தந்தால் பேதை - இணக்கமுடன்
கூட்டமுதுஞ் செய்வரது கோல மயிலன்ன
வீட்டுடைப் பெண்கள் விருப்பு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Mar-22, 8:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

மேலே