அரசுபணியியல்

அதிகாரம் : அரசுபணியியல்
குறள்
1. அரசுடை குடிமைப்பணி வாய்ப்பது அரிதாதலால்;
முரசுடை கடமைக்கண் பேறு.
2. இருக்கை இருக்கை இருக்கை நற்கை;
பலக்கை போற்றுகை வாழ்க்கை.
3. எச்செயல் எவர்கொண்டு ஆற்றிட சிறப்பதென;
அச்செயல் அவர்கொண்டே முடிப்பதறிவு.
4. குடியறிந்து இன்னபிற இவையென இன்முகமாய்;
கடமைகொளல் என்றும் முத்தாய்ப்பு.
5. சாற்றுவதால் தன்னிகர் தனக்கினி இலரேலென;
ஆற்றுவதால் சிறப்பதாம் கடமை.
6. பழிப்பதாய் அமையுமாம் தம்செயலால் அலை; கழிப்பதாய் உணர்வதால் குடி.
7. காலத்தால் முடிவுறா செயல்நீட்டம் காண்பதால்;
இன்னல்பல கொள்வதாம் குடி.
8. கடமை கொண்டிட கையூட்டு கோரிடின்தம்;
உடமை கொள்வதோ இழுக்கு.
9. செய்யற்க செயல்முடித்து நெறியற்று முரண்பட;
மெய்யற்க வீழ்வதாம் வாழ்வு.
10. செய்யுக செயல்கண்டு பழிநோக்கி அஞ்சித்தவிர்த்திடல்;
கையூட்டு கொள்வதினும் கேடாம்.

எழுதியவர் : ஆ.பிரிதிவி (30-Mar-22, 10:19 pm)
சேர்த்தது : PRITHVI
பார்வை : 63

மேலே