PRITHVI - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : PRITHVI |
இடம் | : |
பிறந்த தேதி | : 29-Sep-1979 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-Mar-2022 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 10 |
குறள்
Dedicated to South India's All Time Lady Super Star - Actress "Nayanthara" by her Supreme Fan.
1. நயனோடு நயம்பட நட்பதே நட்பு;
நற்றுணை நற்பயன் நன்றே.
2. நயப்பட நயமுற நயமடம் இம்மூன்றும்;
வயப்பட நயனெனும் நங்கைக்கே.
3. மின்னல் கொடியிடை விண்ணிறங்கி பூதொட்டு;
தென்னல் பணியுமுன் நயன்.
4. நயன்தாரா நானும் நானம் நாளும்;
வியந்தாரா விண்மீன்கள் வீழ்ந்து.
5. நயன்தாரா நட்பு நன்மையிற்ஓங்கும் மற்றவை;
பயன்தாரா நின்று விடும்.
6. வல்லினம் மெல்லினம் இடையினம் தமிழினம்;
நல்லினம் நயனெனும் பெண்ணினம்.
7. திணியென பிணியென ஜனகன நயனென;
இனியென இனியென திரையென.
8. நயனின்றி திரைகண்டிட செலவிடும் நாழிகை;
பயனின்ற
குறள்
அதிகாரம்: ஈதல்
1.வறியோர்க்கு வலியறிந்து ஈவதால் என்றும்;
பெரியோர்க்கு மிகுவதாம் அழகு.
2. தன்தேவைகொண்டு மிகுதியை பிறர்க்கு ஈதல்;
இயல்பென கொண்டிடல் நன்று.
3. செல்வ செழிப்புடையோர் ஈதலைவிட வறியவர்;
தம்மெய்வருத்தி ஈவது மேலாம்.
4. ஈதலின்றி தம்தலைமுறை நோக்கி பொருளீட்டிடல்;
சாதலன்றி வேறல்ல உயிர்க்கு.
5. நல்முனைப்பாய் கொண்டிட ஈதல் குணம்;
தனித்தே உயர்வதாம் நின்புகழ்.
6. பெரிதாம் ஈதலெனும் குணக்கடல் விரிந்தே;
அரிதாம் பாற்கடல் கொள்வது.
7. முகவையேந்தி அகவை முழுதும் ஈகைகொண்டு;
உவகை காண்பது அறிவு.
8. மண்ணில் யாவர்க்கும் உயிர்கொண்டிட உணவிடல்;
ஈதலில் முழுமுதலாய் நிற்பதாம்.
9. ஈகைவழி பெற்ற பொருள்துய்த்து ப
குறள்
1. தன்னைத்தான் மெருகேற்றி மதிப்புற செய்திடின்;
இசைப்பட அமைவதாம் வாழ்வு.
2. தூற்றுதல் இகழென கொள்வோமாயின் என்றும்;
போற்றுதல் நற்புகழ் என்பதாம்.
3. ஆற்றுவதால் துளங்கிட எளியோர்வாழ்வு பல்குடி;
போற்றுவதால் அடைவதாம் புகழ்.
4. கைத்தேர்ந்து ஆக்கமாய் பயனுற எஞ்ஞான்றும்;
மெய்த்தேர்ந்து உயர்வதாம் நற்புகழ்.
5. பேராளுமை சமூகமாற்றம் வித்திடல் செயற்கரியசெய்திடல் ;
இம்மூன்றும் புகழ்கொள் சூத்திரமே.
6. சீர்மிகுபார்வை செயற்திறன் அனுகிட எளிமையென;
ஈர்ப்பதால் மிகுவதாம் புகழ்.
7. பிறர்கென இன்னுயிரீந்த தன்னலன்கருதா தகமையினர்;
மாண்டும் உயிர்கொண்டே அறிவர்.
8. புகழ்நாடி செய்திட்ட எச்செயலும் சறுக்கிட;
பயனின்றி தொ
அதிகாரம் : அரசுபணியியல்
குறள்
1. அரசுடை குடிமைப்பணி வாய்ப்பது அரிதாதலால்;
முரசுடை கடமைக்கண் பேறு.
2. இருக்கை இருக்கை இருக்கை நற்கை;
பலக்கை போற்றுகை வாழ்க்கை.
3. எச்செயல் எவர்கொண்டு ஆற்றிட சிறப்பதென;
அச்செயல் அவர்கொண்டே முடிப்பதறிவு.
4. குடியறிந்து இன்னபிற இவையென இன்முகமாய்;
கடமைகொளல் என்றும் முத்தாய்ப்பு.
5. சாற்றுவதால் தன்னிகர் தனக்கினி இலரேலென;
ஆற்றுவதால் சிறப்பதாம் கடமை.
6. பழிப்பதாய் அமையுமாம் தம்செயலால் அலை; கழிப்பதாய் உணர்வதால் குடி.
7. காலத்தால் முடிவுறா செயல்நீட்டம் காண்பதால்;
இன்னல்பல கொள்வதாம் குடி.
8. கடமை கொண்டிட கையூட்டு கோரிடின்தம்;
உடமை கொள்வதோ இழுக்கு.
9. செய்யற்க செயல்முடித்த
குறள்
1.காடுகொண்ட முல்லை சுருங்கையிலே நித்தம்; பூமிகொண்ட வெப்பம் மிகுவதாம்.
2. மின்னாற்றல் கொணர்ந்திட கரிதனை எரித்திடவே; தன்வெப்பம் பெருகுவதாம் புவிதனில்.
3. தொழிற்கூடம் உமிழ்ந்திடும் கரியகந்தக வாயுக்கள்; காற்றில்கலந்திட ஓங்கிடும் மண்வெப்பம்.
4.சாலையோடும் வாகனங்கள் ஈட்டிடும் புகைதனிலே; கூடிடுமாம் பூமிபந்தின் உஷ்னம்.
5. கரியமில சதுப்புநில சிரிப்பூட்டுவாயுக்கள் உமிழ்வதனை ; குறைத்திட தனிவதாம் பூகோளவெப்பம்.
6. பசுங்கூட்டுவாயுக்கள் போர்வை கொள்வதால் எதிர்படாமல்; நிலைக்குமாம் நிலத்தினிலே சூரியவெப்பம்.
7. புவிவெப்பம் ஏற்கையில் பனிப்படலம்கரைந்திட நீர்மட்டம்; உயர்ந்தே நிலம்தனை உண்ணுமாம்.
8. மரம
குறள்
1. நற்பண்பென அறிவது யாதெனின் அறம்வழுவா;
நெறியுடை மாண்பமை செயலாம்.
2. பண்பாளும் மனிதர்க்குவாய்ப்பதாம் செல்வம் என்றும்;
உள்ளாரந்த சிறப்பமை குணமாய்.
3. வான்தரித்த விண்மீன்திரளினிலே மிகுந்தே மின்னுவதாம்;
தான்தரித்த பேராயுதமாய் பண்பு.
4. பண்பெனும் திண்மை உண்டாயின் பாற்கடல்;
அமிழ்தம் கொணர்வதாய் சிறப்புறும்.
5. அடித்தளம் நற்பண்புகளால் அமைந்திடின் வாழ்க்கை;
படித்தளம் கொண்டே எழும்.
6. பண்பால் விளைவதுயாவும் காலத்தால் பிறர்;
சான்றாய் பற்றி படர்வதறிவு.
7. பண்புடை தூரிகை வரைந்திட மாண்பாய் தரிப்பதாம் வாழ்வெனும் சித்திரம்.
8. அடாதுசெய்திடும் யாவரும் பெரிதுவக்க என்றும்;
விடாதுசெய்திடும் இயல்பே நற்பண்பு.
குறள்
அதிகாரம்: போரிடா பேராளுமை
1. நாடுகள் நிலமெனுமோகத்தால் நகர்த்திடும் எல்லை; கோடுகளால் மூள்வதாம் போர்.
2. போர்ப்பதற்றம் பற்றிட நுகர்தரித்த பொருள்தட்டி; விலைவீங்கி விண்ணை முட்டும்.
3. போரெனும்கோரம் உண்டாயின் குடிதம்வாழ்வு புலம்திரிந்து; தாங்கொனா துயருற்று சிதைவுறும்.
4. பார்க்கண்ட போர்ப்பின்புலம் ஆய்ந்தறிந்திடின் தனியொருவன்; பேராசையாம் மண்ணாளும் கலகமாம்.
5. பல்லுயிர்மாய்த்து போர்த்தொடுத்து முடிமகுடம் சூடினும்; துறவுடை வாழ்வே மேல்.
6. ஏவுகணையெய்து குடியுடைநிலை தனைத்தாக்கி உயிர்; காவுதனை கொள்ளும் போரிடேல்.
7. போருண்ட நாட்டின்சுவடுகள் காலத்தால் மறைவதாயினும்; வேருண்ட உயிர்த்தழும்போ நீங்காநிற்கு
வாக்கு
வயது பதினெட்டெனில் மதியினில் நினை-வாக்கு !
வாக்காளர்பட்டியளில் பெயர் சேர்ப்பதை கன-வாக்கு! !
என்வாக்கு எனதுரிமையெனும் நிலைப்பாட்டை உரு-வாக்கு!
அனைவரின் கரம்பற்றி வாக்காளர்பட்டியலை வலு-வாக்கு!!
விலையின்றி மின்னணுயெந்திரத்தில் செலுத்திடும் உன்-வாக்கு!
பாரினில் உயர்த்திடும் நம்நாட்டின் செல்-வாக்கு!!
தேர்தலில் போட்டியிடுவோர்தம் கொள்கை சொல்-வாக்கு!
பகுத்தறிந்தே போட்டுவிடு என்றும் நல்-வாக்கு!!
வாக்குச்சாவடிக்கு தவறாமல் சென்று பதி-வாக்கு!
முறையே சட்டமியற்றுவதில் உன்பங்கினை மறை-வாக்கு! !
ஜனநாயக கடமைதனை நற்பாங்கினில் நிறை-வாக்கு!
மக்களாட்சியின் மாண்புதனை மென்மேலும் உயர்-வாக்கு! !