போரிடா பேராளுமை

குறள்
அதிகாரம்: போரிடா பேராளுமை
1. நாடுகள் நிலமெனுமோகத்தால் நகர்த்திடும் எல்லை; கோடுகளால் மூள்வதாம் போர்.
2. போர்ப்பதற்றம் பற்றிட நுகர்தரித்த பொருள்தட்டி; விலைவீங்கி விண்ணை முட்டும்.
3. போரெனும்கோரம் உண்டாயின் குடிதம்வாழ்வு புலம்திரிந்து; தாங்கொனா துயருற்று சிதைவுறும்.
4. பார்க்கண்ட போர்ப்பின்புலம் ஆய்ந்தறிந்திடின் தனியொருவன்; பேராசையாம் மண்ணாளும் கலகமாம்.
5. பல்லுயிர்மாய்த்து போர்த்தொடுத்து முடிமகுடம் சூடினும்; துறவுடை வாழ்வே மேல்.
6. ஏவுகணையெய்து குடியுடைநிலை தனைத்தாக்கி உயிர்; காவுதனை கொள்ளும் போரிடேல்.
7. போருண்ட நாட்டின்சுவடுகள் காலத்தால் மறைவதாயினும்; வேருண்ட உயிர்த்தழும்போ நீங்காநிற்கும்.
8. அணுவைப்பிளந்து ஆற்றல்கொணர்ந்து ஆக்கமாய் துய்ப்பாய்; அழிவெனும் போர் துறந்தே.
9. மண்ணாளும்மானிடர் போர்வியுகத்தைத் தகர்த்து ஆளுமாம்; எந்நாளும் மண்ணே இறுதியாய்.
10. போர்த்தொடுத்தல் ஆளுமையெனக் கருதிடின் என்றும்; போர்த்தவிர்த்து பேராளுமை காண்பதறிவு.

எழுதியவர் : ஆ.பிரிதிவி (14-Mar-22, 7:02 pm)
சேர்த்தது : PRITHVI
பார்வை : 581

மேலே