பண்புடைமை
குறள்
1. நற்பண்பென அறிவது யாதெனின் அறம்வழுவா;
நெறியுடை மாண்பமை செயலாம்.
2. பண்பாளும் மனிதர்க்குவாய்ப்பதாம் செல்வம் என்றும்;
உள்ளாரந்த சிறப்பமை குணமாய்.
3. வான்தரித்த விண்மீன்திரளினிலே மிகுந்தே மின்னுவதாம்;
தான்தரித்த பேராயுதமாய் பண்பு.
4. பண்பெனும் திண்மை உண்டாயின் பாற்கடல்;
அமிழ்தம் கொணர்வதாய் சிறப்புறும்.
5. அடித்தளம் நற்பண்புகளால் அமைந்திடின் வாழ்க்கை;
படித்தளம் கொண்டே எழும்.
6. பண்பால் விளைவதுயாவும் காலத்தால் பிறர்;
சான்றாய் பற்றி படர்வதறிவு.
7. பண்புடை தூரிகை வரைந்திட மாண்பாய் தரிப்பதாம் வாழ்வெனும் சித்திரம்.
8. அடாதுசெய்திடும் யாவரும் பெரிதுவக்க என்றும்;
விடாதுசெய்திடும் இயல்பே நற்பண்பு.
9. மலைப்பதாம் இறுகிய மனம்தனை ஆட்கொண்டே;
துளைப்பதாம் துணையென பண்பு.
10. பண்புகள் நீதிநெறியற்று தீங்காயமைய உடல்;
என்புகள் இன்றி விழும்.