தொலைந்த சொந்தம், தொடரும் பந்தம்
நிழலின் அசைவுக்கு பகலவனின் ஒளி தேவை..
இலையின் அசைவுக்கு காற்றின் அனுமதி தேவை..
அசைவின்றி இசை பிறக்காது
இசையின்றி இவ்வுலகம் இயங்காது
கிடைத்த சொந்தங்களில் தொடரும் பந்தங்கள் சில
தொடரும் பந்தங்களில் தொடர போகும் சொந்தங்கள் சில
மாற்றங்கள் தொடரும்
தொடரும் மாற்றங்கள் தான்
உன் வாழ்கைக்கான ஏற்றங்கள்...