ஏற்புடையதல்ல
ஓடி வந்து உயிர் காக்கும்
ஆறு போல
தேடி சென்று கற்கும் கல்வி
அறிவைத் தந்து
வாழ்நாள் முழுவதும்
வாழ வைக்கும்
இன்றைய காலங்களில்
அகிலமெங்கும்
கொற்றவனைப் போல்
கற்றவனை ,மக்கள்
போற்றுகிறார்கள்—நாடும்
பெருமை அடைகிறது
அனைவரும் தங்கள்
அறிவை விரிவு படுத்தி
உழைத்து சம்பாதித்து
உயர்ந்து வாழ ,அரசாங்கம்
கல்வியை அனைவருக்கும்
கட்டாயமாக்க வேண்டும்
பசி, பட்டினியால்
பாமர மக்கள் வீதிகளில்
யாரும் இனி சாகக்கூடாது,
கல்வியை பொது சொத்தாக்கிக்
கற்று கொடுத்து
காலமுழுதும் சொந்தக்காலில்
நின்று வாழ கற்றுதர வேண்டும்
சாதி, மதம் பார்க்காமல் கல்வியை
அனைவருக்கும் கற்றுகொடுங்கள்
நாமும் முன்னேறலாம்
நாடும் முன்னேறும்
அதைவிட்டு இந்தியா ஒளிர்கிறது
என்பது ஏற்புடையதல்ல !