பேரின்பம் காண வழிகள்
ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தின் அடுக்குகளை
'லிப்ட்' துணையால் விரைவில் அடையலாம்
படிக்கட்டின் துணையாலும் அடைந்திடலாம்
மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தி
ஞானி முக்தி அடைய வழி தேட
'வாயினால் பாடி. மனிதனால் சிந்தித்து'
பக்தியால் 'லிப்ட்' போல இறைவன்
இருப்பிடத்தை விரைவில் அடைகின்றான் பக்தன்