வாக்கு

வாக்கு
வயது பதினெட்டெனில் மதியினில் நினை-வாக்கு !
வாக்காளர்பட்டியளில் பெயர் சேர்ப்பதை கன-வாக்கு! !
என்வாக்கு எனதுரிமையெனும் நிலைப்பாட்டை உரு-வாக்கு!
அனைவரின் கரம்பற்றி வாக்காளர்பட்டியலை வலு-வாக்கு!!
விலையின்றி மின்னணுயெந்திரத்தில் செலுத்திடும் உன்-வாக்கு!
பாரினில் உயர்த்திடும் நம்நாட்டின் செல்-வாக்கு!!
தேர்தலில் போட்டியிடுவோர்தம் கொள்கை சொல்-வாக்கு!
பகுத்தறிந்தே போட்டுவிடு என்றும் நல்-வாக்கு!!
வாக்குச்சாவடிக்கு தவறாமல் சென்று பதி-வாக்கு!
முறையே சட்டமியற்றுவதில் உன்பங்கினை மறை-வாக்கு! !
ஜனநாயக கடமைதனை நற்பாங்கினில் நிறை-வாக்கு!
மக்களாட்சியின் மாண்புதனை மென்மேலும் உயர்-வாக்கு! !

எழுதியவர் : ஆ.பிரிதிவி (17-Mar-22, 4:19 pm)
சேர்த்தது : PRITHVI
பார்வை : 554

மேலே