இலைக் கள்ளிப்பால் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
செய்ய கரப்பான் செவிநோய்வா தம்போக்கும்
பையவருஞ் சூலைதனைப் பாழாக்கும் – மெய்யி(ன்)மிக
ஊது கிரந்தியோ டுட்புண்ணை யாற்றிவிடும்
ஓதுமிலைக் கள்ளிப்பால் ஓரு
- பதார்த்த குண சிந்தாமணி
இதனால் செங்கரப்பான், செவிநோய், வாத நோய்கள், சூலை, ஊதுகிரந்தி, உள் விரணம், கிரந்தி இவை நீங்கும்