மான்செவிக் கள்ளிப்பால் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
மான்செவிக்கள் ளிப்பாற்கு மாறா விரணங்கள்
ஏன்கிளைக்கு நன்மலமி றங்குங்காண் - ஊன்சேர்
வரிகிரந்தி நீங்கா வறட்சிசொறி யோடு
பொரிகிரந்தி யும்போம் பொரிந்து
- பதார்த்த குண சிந்தாமணி
இதனால் ஆறாப்புண், வரிக்கிரந்தி, தேக வறட்சி, சொறி, படை, பொரிகிரந்தி இவை நீங்கும்