சிற்றாமணக்கு நெய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மருந்தின் அழலும் வளியான்மூ லத்துள்
பொருந்தும் அழலுமறப் போக்குங் - குருந்திற்கு
நற்றாய் எனவளர்க்கும் நாளுமழ லுந்தணிக்குஞ்
சிற்றாம ணக்குனெய்தான் நேர்

- பதார்த்த குண சிந்தாமணி

இது மருந்துகளால் ஏற்படும் சூட்டைத் தவிர்க்கும்; வாயுவினால் மூலத்தில் உண்டாகிற வெப்பத்தை நீக்கும்; உடல் வளர்ச்சிக்குத் தாயைப் போல உறுதுணையாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Mar-22, 3:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே