ஆமணக்கு நெய் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு)
ஆமணக்கு நெய்யால் அனலமுண்டா (மி)யாவர்க்கும்
பூமணக்கு மேனி புரிகுழலே – வா’ய்’மணக்கக்
கொள்ளில் வயிறுவிடுங் கோரமுள்ள வாயுவறும்
உள்ளி(ல்)வரு குன்மம்போம் ஓது
- பதார்த்த குண சிந்தாமணி
நேரிசை வெண்பா
(’ஐ’ அ ய்’ அ மோனை, ய் இடையின ஆசு, ‘ம்’ எதுகை)
அம்பொனிற மும்விந்து மாங்குடலின் ஏற்றமறும்
ஐம்பொறிச் சூடெரிவும் ஆறுங்காண் - அம்புவியிற்
பாமணக்கும் இன்பமொழிப் பாவாய் நலஞ்செறிந்த
ஆமணக்கின் நெய்யை அருந்து
- பதார்த்த குண சிந்தாமணி
விளக்கெண்ணெய் குடித்தால் பேதியாகும்; கோர வாதம், குன்மம், குடலேற்றம், உடம்பு, கண், மூக்கு, செவி, வாய், இவற்றிலுண்டாகும் எரிச்சல் இவை நீங்கும்