உறவுடைமை

குறள்
அதிகாரம்: உறவுடைமை
1. காக்கை கரைந்தே அழைத்திடுமாம் தம்முறவை; பகிர்ந்தே கூடிவாழ்வதாம் வாழ்கை.
2. பணம்கொண்டு ஈர்ப்பதால் புடைசூழ அமைவதினும்; குணம்கொண்டு சிறப்பதாம் நல்லுறவு.
3. கரியநிறம் தரித்ததாயினும் குயில்தம் ஓசைக்கிணங்க; உரியநிறமாய் இனிதுவக்குமாம் உறவு.
4. சுற்றம் தம்முறவென இடுக்கண்களையும்கால் பற்றிட; ஏற்றம் காண்பது அறிவு.
5. உறவுகள் சண்டையிட்டு தம்முள்மாய்ந்திட நற்பல; வரவுகளின்றி கேடாய் அமையும்.
6. காலத்தால் உறவுதம் வழிநோக்கி பிரிவதாயினும்; பாலத்தால் இணைப்பதாம் நிகழ்வு.
7. தீங்கிடுமென தன்னைத்தான் தொலைதூரம் விலக்கிடின்; நீங்கிடும்நல் உறவுடை அரண்.
8. வாழையென வழித்தோன்றி வாழ்வாங்கு வாழ்ந்திடுமுறவுதனை; கோழையென கொள்வோர் அறிவிலார்.
9. ஊக்கமாய் உறுதுணையாய் தழைத்தோங்கிய உறவென்பது; ஆக்கமாய் அமைந்திடும் உயிர்க்கு.
10. நஞ்சுகொண்டு உறவுதோலிட்டு வலைவிரித்திடும் வஞ்சகத்தீ; மஞ்சுகொண்டு விரட்டுவதால் அணையும்.

எழுதியவர் : ஆ.பிரிதிவி (14-Mar-22, 7:19 am)
சேர்த்தது : PRITHVI
பார்வை : 83

மேலே