மயில் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

நேரிசை வெண்பாக்கள்
அழகு மயில்விநாய கன்மாண்பும் பண்பும்
வழங்க, மணங்கமழும் வைய(ம்) - அழகும்
அலங்கார இன்பமும் ஆசியும் ஈய
நலமெல்லாம் நல்குவான் நம்பு! 1
அழகு மயில்கள் இரண்டோடு காட்சி;
பழம்போன்று இன்சுவைப் பார்வை; - அழகு
விநாயகன் அங்கேயே வேண்டிய எல்லாம்
அநாயாச மாய்த்தருவான் இன்று! 2
காலடியில் வண்ண மயில்க(ள்) இருக்கவே
ஆலமரம் போலவே காக்கின்ற - ஞாலமயில்
நற்றாள் விநாயகன் மாண்புமிகு தாளையே
பற்றுவோம் என்றும் பணிந்து! 3
விநாயகர் பட உதவி - தினமலர்