கண்ணாடி விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

நேரிசை வெண்பாக்கள்
கனிவான கண்ணாடி நல்விநாய கன்தாள்
இனிதாக நீவணங்க இல்லம் - கனிபோல்
வளம்பெறுமே! என்றுமே வாய்நிறைய உள்ளம்
தளராது வாழ்த்தி வணங்கு! 1
அழகான கண்ணாடி நல்விநாய கன்தாள்
பழகிப் பணிவோர்க்குப் பாரில் - இழப்பில்லை
என்ற ஒருசெய்தி எந்நாளும் எண்ணியே
வென்று வருவாய் விரைந்து! 2
விநாயகர் பட உதவி - தினமலர்