ஷிர்தியில் வாழும் மகான்
ஷிர்தியில் வாழும் மகான்
கலங்கி நிற்பவரை கருணையோடு நோக்கி
பற்பல அற்புதங்கள் நிகழ்த்திய மகான்
பார்வை ஒன்றால் பரிதவிக்கும் மக்களின்
பாவங்கள் யாவையும் போக்கிடும் மகான்
உண்மை மெய்ப்பொருளை உணர்த்திய மகான்
உலகமெல்லாம் போற்றும் உன்னத மகான்
ஊமையாக வாழ்ந்தவரை உயர்த்திய மகான்
ஊரெல்லாம் வாழ்ந்திட தன்னை வருத்திய மகான்
ஜீவன் உய்வடைய ஜகத்தினில் அவதரித்த மகான்
உடலை பிரிந்த பின்னும் வாழ்ந்திடும் மகான்
ஆலயம்தோறும் ஒளியாக விளங்கிடும் மகான்
அன்னையாக யாவரையும் அரவணைக்கும் மகான்
ஒரு ஆசானாகி நின்று வழிநடத்தும் மகான்
காலமெல்லாம் காணாத் துணையாக உள்ளத்தில்
உள்ள சகல சங்கடங்களும் நீக்கிடும் மகான்
சகல சக்திகளும் சேர்ந்த பரம்பொருளாய்
பளிங்கு சிலையில் அமர்ந்திருக்கும் சாயிநாத மகான்